/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுநீரக கோளாறு வராமல் காப்பது எப்படி? திருப்பூர் கிட்னி சென்டர் டாக்டர் விளக்கம்
/
சிறுநீரக கோளாறு வராமல் காப்பது எப்படி? திருப்பூர் கிட்னி சென்டர் டாக்டர் விளக்கம்
சிறுநீரக கோளாறு வராமல் காப்பது எப்படி? திருப்பூர் கிட்னி சென்டர் டாக்டர் விளக்கம்
சிறுநீரக கோளாறு வராமல் காப்பது எப்படி? திருப்பூர் கிட்னி சென்டர் டாக்டர் விளக்கம்
ADDED : ஜூலை 01, 2025 12:17 AM

''சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கு, 60 முதல், 70 சதவீதம் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் தான் காரணம்,'' திருப்பூர் கிட்னி சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் தவிர, சிறுநீரக கல், சிறுநீரக தொற்று உள்ளிட்டவையும் பிற காரணங்களாக உள்ளன. சர்க்கரை, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொண்டால், 'கிட்னி'யை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில், 60 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். சர்க்கரை நோயை பொறுத்தவரை, உலகின் தலைநகராக இந்தியா விளங்குகிறது.
இட்லி, தோசை, பூரி போன்ற மாவு நிறைந்த பொருட்களை அதிகம் உட்கொள்வது, உடற்பயிற்சி இல்லாதது, அளவுக்கதிமான மன அழுத்தம், போதிய துாக்கமில்லாதது போன்றவை தான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஏற்பட காரணம். எனவே, உணவு பழக்கம், தினசரி உடற்பயிற்சி செய்வது போன்றவை ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை சீராக வைக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், 15 நாளுக்கு ஒருமுறை ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் உபகரணத்தை வீடுகளில் வைத்து, பரிசோதித்துக் கொள்வது நல்லது.
சர்க்கரையும், ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்டவை மனிதனை மெல்லக் கொல்லும் நோய்கள் என்பதை உணர வேண்டும்.
வருமுன் காப்பது உட்பட நோயில் இருந்து விடுபடுவதற்குரிய ஆலோசனை மற்றும் நவீன மருத்துவ முறையிலான சிகிச்சையை எங்கள் மருத்துவமனையில் வழங்கி வருகிறோம். தேசிய தரச்சான்று பெற்றுள்ளோம். சிறுநீரக கற்களுக்கான அதிநவீன லேசர் சிகிச்சை, சிறுநீரக புற்றுநோய் சிகிச்சை, ஆண் மலட்டுத்தன்மை உள்ளிட்டவற்றுக்கும் சிகிச்சை வழங்குகிறோம். முதல்வரின் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில காப்பீடுகள் ஏற்கப்படுகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு : 9566642642, 9894119048.