/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்மா கிட்னி சென்டரில் குறைந்த கட்டணம்; சிறந்த சிகிச்சை
/
பத்மா கிட்னி சென்டரில் குறைந்த கட்டணம்; சிறந்த சிகிச்சை
பத்மா கிட்னி சென்டரில் குறைந்த கட்டணம்; சிறந்த சிகிச்சை
பத்மா கிட்னி சென்டரில் குறைந்த கட்டணம்; சிறந்த சிகிச்சை
ADDED : ஜூலை 01, 2025 12:17 AM
''திருப்பூர் - தாராபுரம் மெயின் ரோடு சங்கிலிபாலம் அருகில், தில்லை நகர் கார்னரில், பத்மா கிட்னி சென்டர் செயல்படுகிறது. கடந்த ஜன., 2022ல் தொடங்கப்பட்ட இந்த கிட்னி சென்டரில், குறைந்த கட்டணத்தில் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது'' என, கிட்னி சென்டர் டாக்டர்கள் தியாகராஜன், கிருத்திகா ஆகியோர் கூறினர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:பத்மா கிட்னி சென்டர், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், பல்வேறு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது.
சிறுநீரக அறுவை சிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு நோய்களுக்கான சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே வசதி மற்றும் சிறந்த லேப் வசதி, அறுவை சிகிச்சை அரங்குடன் செயல்படுகிறது. சிறுநீரக கற்கள், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் எரிச்சல், கிருமி தொற்று, சிறுநீரக புற்றுநோய், சிறுநீர் பையில் புற்றுநோய், விரை வீக்கம், கேன்சர், குடலிறக்கம், ஆணுறுப்பில் புற்றுநோய், பெண்கள் இருமும் போதும், தும்மும் போதும் சிறுநீர் கசிவு, ஆண்மை குறைபாடு, குழந்தையின்மை மற்றும் சிறுநீரக மண்டலம், இனப்பெருக்க மண்டலம் சார்ந்த குறைபாடுகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை உட்பட பல்வேறு நோய்களுக்கு, உள்நோக்கு எண்டோஸ்கோபி மற்றும் லேசர் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி உள்ளிட்ட பொது மருத்துவம், காயங்கள், கட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு பொது அறுவை சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு, 75981 70758, 80724 53840 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.