/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிட்ஜோன்' கண்காட்சி நிறைவு ரூ.300 கோடிக்கு வர்த்தக விசாரணை
/
'நிட்ஜோன்' கண்காட்சி நிறைவு ரூ.300 கோடிக்கு வர்த்தக விசாரணை
'நிட்ஜோன்' கண்காட்சி நிறைவு ரூ.300 கோடிக்கு வர்த்தக விசாரணை
'நிட்ஜோன்' கண்காட்சி நிறைவு ரூ.300 கோடிக்கு வர்த்தக விசாரணை
ADDED : மே 26, 2025 11:43 PM
திருப்பூர், ; திருப்பூரில் நடந்த 'நிட்ஜோன் -2025' கண்காட்சி நேற்று நிறைவடைந்தது; நான்கு நாட்களில், 300 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தக விசாரணை நடந்துள்ளதாக, கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு தேவையான இயந்திரங்களை காட்சிப்படுத்தும், 'நிட்ஜோன்' கண்காட்சி, வேலன் ஓட்டல் கண்காட்சி அரங்கில், நான்கு நாட்கள் நடந்தது. 'மாலா டிரேடர்ஸ்' சார்பில், புதிய நிட்டிங் மெஷின்கள் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
நவீன பிரின்டிங் மெஷின்கள், எம்பிராய்டரி மெஷின், பனியன் துணிகளை கம்ப்யூட்டர் உதவியுடன், 'கட்டிங்' செய்யும் இயந்திரம், ஆடை வடிவமைப்புக்கான அதிநவீன தையல் மெஷின்கள் இடம்பெற்றிருந்தன.
திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினர் கண்காட்சியை பார்வையிட்டனர். அறிமுகம் செய்யப்பட்டுள்ள நவீன இயந்திரங்களின் செயல் திறனை நேரில் பார்த்து, விசாரித்தனர்.
இதுகுறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ''நான்கு நாட்கள் நடந்த கண்காட்சியில், பிரின்டிங், நிட்டிங், எம்ப்ராய்டரிங் மற்றும் தையல் மெஷின்கள் குறித்து, தொழில்துறையினர் தினமும் பார்வையிட்டு விசாரித்தனர்.
மதிப்பு கூட்டிய ஆடை உற்பத்திக்கான உபபொருட்களையும் பார்த்தனர்.நான்கு நாட்களில், 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்; மொத்தம், 300 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தக விசாரணை நடந்துள்ளது,' என்றனர்.