/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கட்டண வசூல் மையம் மூடல் பெரியபாளையம் மக்கள் அதிர்ச்சி
/
மின் கட்டண வசூல் மையம் மூடல் பெரியபாளையம் மக்கள் அதிர்ச்சி
மின் கட்டண வசூல் மையம் மூடல் பெரியபாளையம் மக்கள் அதிர்ச்சி
மின் கட்டண வசூல் மையம் மூடல் பெரியபாளையம் மக்கள் அதிர்ச்சி
ADDED : மே 26, 2025 11:44 PM
திருப்பூர், ; ஊத்துக்குளி மின் கோட்டத்துக்கு உட்பட்டது, பெரியபாளையம் ஊராட்சி; அங்கு, 4,000க்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன; 10ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மின்நுகர்வோர் வசதிக்காக, பல ஆண்டுகளாக எஸ்.பெரியபாளையத்தில், மின்கட்டண வசூல் மையம் செயல்பட்டு வந்தது.
அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், கூலிபாளையம், நஞ்சராயன் நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, பெரியபாளையம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்த கட்டண வசூல் மையத்தை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கட்டண வசூல் மையம் முன்னறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், கலெக்டர் ஆபீசில் அளித்த மனுவில், 'திடீரென மின் கட்டண வசூல் மையத்தை மூடினால், பெரியபாளையம் சென்று வந்த மக்கள், இனிமேல், 10 கி.மீ., தொலைவில் உள்ள ஊத்துக்குளி சென்று மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். முதியவர்கள், பெண்கள் சென்று மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். முன்னறிவிப்பு இல்லாமல், கட்டண வசூல் மையம் மூடப்பட்டுள்ளது. மீண்டும், எஸ்.பெரியபாளையம் மின் கட்டண வசூல் மையத்தை திறக்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.