/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்னுயிர் காப்பதில் இணையில்லா சேவை சுகன் சுகா மருத்துவமனை மக்களுக்கு தேவை
/
இன்னுயிர் காப்பதில் இணையில்லா சேவை சுகன் சுகா மருத்துவமனை மக்களுக்கு தேவை
இன்னுயிர் காப்பதில் இணையில்லா சேவை சுகன் சுகா மருத்துவமனை மக்களுக்கு தேவை
இன்னுயிர் காப்பதில் இணையில்லா சேவை சுகன் சுகா மருத்துவமனை மக்களுக்கு தேவை
ADDED : ஜூலை 01, 2025 12:19 AM

திருப்பூர், திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் பல்வேறு நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு, நான்கு தளங்களுடன் சுகன் சுகா மெடிக்கல் சென்டர், 24 மணி நேரமும் பல் நோக்கு மருத்துவமனையாக செயல்படுகிறது.
மருத்துவமனையின் சிறப்புகள் குறித்து, சுகன் சுகா மெடிக்கல் சென்டர் நிறுவனர்கள் டாக்டர்கள் சுந்தரன், கார்த்திகை சுந்தரன் ஆகியோர் கூறியதாவது:
எங்கள் மருத்துவமனை 90 படுக்கை வசதியுடன், தனிநபர் அறை, பொது அறை என தனித்தனியே அறைகளுடன் செயல்படுகிறது. சர்க்கரை நோய், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், இதயம், மூளை, நரம்பியல், மகப்பேறு மருத்துவம், தோல், நுரையீரல், முடக்குவாதம், இரைப்பை, குடல் நலம், புற்றுநோய், பல் மருத்துவம், மனநலம், பிசியோதெரபி மற்றும் ஸ்கேன் ஆகிய மருத்துவ பிரிவுகள் வாயிலாக சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவில், பொது மற்றும் லேப்ரோஸ்கோபி, எலும்பு முறிவுக்கு மூட்டு மாற்று; மூளை, தண்டுவட அறுவை சிகிச்சை; ஆர்த்ரோஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சை; குழந்தைகள் நலன்; மகளிர் மகப்பேறு, பிளாஸ்டிக் சர்ஜரி, முகத்தாடை, புற்றுநோய், இரைப்பை, குடல், சிறுநீரகம், ரத்த நாள நோய்கள் அறுவை சிகிச்சை வாயிலாக குணப்படுத்துகிறோம்.
காது, மூக்கு, தொண்டை, விஷ முறிவு சிகிச்சை, குறட்டை மற்றும் துாக்கமின்மை சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அதிநவீன டயாலிசிஸ் பிரிவும் செயல்படுகிறது. முற்றிலும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட இ.சி.ஜி., இ.எம்.ஜி., சிடி ஸ்கேன் பரிசோதனை வாயிலாக சிகிச்சை வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு காலதாமதமின்றி துரிதமாக சிகிச்சை வழங்க, பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், பரிசோதனை செய்து சிகிச்சையளிக்கின்றனர். விரைவில் 'ஹைடெக் டயாலிசிஸ்' பிரிவு துவங்கவுள்ளோம். மேலும், தகவல்களுக்கு, 73730 78573, 96885 63666 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எங்களது பிற சிகிச்சை மையங்களான, வஞ்சிபாளையம் பேபி பேக்கரி அருகில், நியூ திருப்பூர் அப்பேரல்ஸ் பார்க், அவிநாசி அருகில் உள்ள தெக்கலூர் ஆகிய இடங்களிலும் சிகிச்சை பெறலாம்.
'தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர மருத்துவ சிகிச்சையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில், இரு நாட்கள் கட்டணமில்லாமல் சிகிச்சை வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.