/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரிக்கும் திருட்டு அச்சத்தில் பொதுமக்கள்; போலீசாருக்கு மனு
/
அதிகரிக்கும் திருட்டு அச்சத்தில் பொதுமக்கள்; போலீசாருக்கு மனு
அதிகரிக்கும் திருட்டு அச்சத்தில் பொதுமக்கள்; போலீசாருக்கு மனு
அதிகரிக்கும் திருட்டு அச்சத்தில் பொதுமக்கள்; போலீசாருக்கு மனு
ADDED : அக் 14, 2025 10:17 PM
உடுமலை; உடுமலை பெரியகோட்டை ஊராட்சி பகுதியில், தொடர் திருட்டுக்கள் நடக்கும் நிலையில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என குடியிருப்போர் நல சங்கங்கள் இணைந்து மனு அளித்துள்ளனர்.
பெரியகோட்டை ஊராட்சி, காந்திநகர்-2, விரிவு 3,4, ஆர்.எஸ்.அவன்யூ, அதிஷ்டா கார்டன், அய்யலுமீனாட்சி நகர், ஆறுமுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில், திருட்டு அதிகரித்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இப்பகுதிகளில், கடந்த மூன்று மாதத்தில், 10க்கும் மேற்பட்ட வீடுகளில், பகலிலும், இரவிலும் திருட்டு நடந்துள்ளது.
இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருடர்கள் புதுப்புது யுக்தியை கையாண்டு, பூட்டி இருக்கும் வீடுகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் நோட்டமிட்டு, நகைகள், பணம் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களை திருடிச்சென்று விடுகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், திருட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில், என்ன நடக்குமோ என ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வசித்து வருகிறோம்.
இங்கு குடியிருப்பவர்கள், வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமலும், பெண்கள் நடைபயிற்சிக்கு வெளியில் செல்ல முடியாத நிலையும் உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், பொதுமக்களின் உடமைக்கும், உயிருக்கும் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும், என குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்துடன், உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

