/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரள வாலிபரிடம் பணம் பறிப்பு; திருப்பூரில் 2 பேர் கைது.. 'நாங்கள் போலீசாக்கும்'

ADDED : அக் 14, 2025 11:03 PM
திருப்பூர்: போலீஸ் என கூறி, கேரள இளைஞர்களை தாக்கி பணத்தை பறித்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், காசர்கோட்டை சேர்ந்தவர் அப்துல்ஷாகிர் அனஸ், 32. முகமது ராசித், 28. இருவரும், திருப்பூர், ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனியில் தங்கி, காதர்பேட்டையில் வேலை செய்து வந்தனர். கடந்த, 12ம் தேதி டூவீலரில் ராயபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்களை தொடர்ந்து, வேகமாக டூவீலரில் வந்த, இருவர், கேரள இளைஞர்கள் சென்ற டூவீலரை உரசிய போது, 'பார்த்து வண்டியை ஓட்டுங்கள்,' என்று கூறினர்.
கேரளா வாலிபர்களிடம், 'நாங்கள் போலீஸ் தெரியுமா?' எனக்கூறி, இருவரையும் தாக்கினர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்வதாக மிரட்டி, 2,500 ரூபாயை பறித்து சென்றனர். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். அதில், திருப்பூர், பி.என்.ரோடு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் சேகர், 29 மற்றும் பெருமாநல்லுாரை சேர்ந்த மோகன்குமார், 25 ஆகியோரை கைது செய்தனர்.