/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்
/
ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்
ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்
ஞான தண்டாயுதபாணி கோவிலில் 22ல் சூரசம்ஹார விழா துவக்கம்
ADDED : அக் 14, 2025 09:05 PM
உடுமலை; மடத்துக்குளம் பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில் வரும், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது.
மடத்துக்குளம் அருகேயுள்ள பாப்பான்குளத்திலுள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா, வரும் 22ம் தேதி, மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கலச ஆவாஹனம், சுப்ரமணியர் மாலா மந்திர ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்குகிறது.
தினமும், யாக சாலை பூஜைகள், முருகப்பெருமான், இந்திர விமானம், யானை, ஆட்டுக்கிடா ,மயில் என தினமும் ஒவ்வொரு வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது. 26ம் தேதி, 7:00 மணிக்கு, அம்மை, அப்பனை வழிபட்டு, வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 27ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, சூரனை வதம் செய்து வெற்றி கொள்ளும் சூர சம்ஹாரம் நிகழ்ச்சியும், 28ம் தேதி, சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.