/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் சமையல் பொருட்களுடன் வந்து பரபரப்பு
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் சமையல் பொருட்களுடன் வந்து பரபரப்பு
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் சமையல் பொருட்களுடன் வந்து பரபரப்பு
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் சமையல் பொருட்களுடன் வந்து பரபரப்பு
ADDED : ஜூன் 03, 2025 11:50 PM

உடுமலை;பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், நேற்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திரண்டனர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அலுவலக வளாகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக காய்கறிகள், அடுப்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வந்திருந்தனர்.
போராட்டத்துக்கு, சங்கத்தின் உடுமலை தாலுகா தலைவர் மாலினி தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் குருசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திராவை போல, மாதாந்திர உதவித்தொகை, 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்குவதில்லை.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள, 4 மணி நேர வேலையை அமல்படுத்தி வேலை வழங்க வேண்டும். ரேஷன்கார்டு வாயிலாக மாதம், 35 கிலோ அரிசி வினியோகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா தலைவர் கமலம், செயலாளர் அழகர்சாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் மாற்றுத்திறனாளிகள் தயாரானார்கள்.
வருவாய் கோட்டாட்சியர் குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாதம் 35 கிலோ அரிசி வழங்குதல் மற்றும் இலவச பட்டா வழங்கும் திட்டத்தில், முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர். காய்கறி, சமையல் அடுப்புடன் மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.