/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'பெண்களுக்கு ஆரோக்கிய சூழலை ஏற்படுத்துங்கள்' பாலின சமத்துவ கருத்தரங்கில் கலெக்டர் யோசனை

ADDED : ஜூன் 29, 2025 01:22 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், பாலின சமத்துவம் மற்றும் உள்புகார் குழு சார்பில், 'பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது' குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஈரோட்டில் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா தலைமை வகித்து பேசினார். இதில் கலெக்டர் ச.கந்தசாமி பேசியதாவது:
தமிழகத்தில்தான் முதன் முதலில் உள்ளாட்சியில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொழிலகங்களில், 41 சதவீத பெண்கள் முறையாக பதிவு பெற்று, பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கு ஆரோக்கியமான சூழ்நிலையை ஒரு ஆண் எவ்வாறு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை பல உதாரணங்கள் மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண்களுக்கான வன்முறையை தடுக்கும் விதமாக பாதுகாப்பு குழு அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்கள், பெண்களுக்கு முழு துணையாக இருந்து பாதுகாக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்துதான் சமுதாயத்தை முன்னேற்ற முடியும். இவ்வாறு பேசினார்.
பெண்களுக்கு எதிரான சவால், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் என பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
மாவட்ட நீதிபதி (லோக் அதாலத்) சுகந்தி, முதன்மை சார்பு நீதிபதி இளவரசி, எஸ்.பி., சுஜாதா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன் சவுத்ரி, முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ஹவித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.