/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஹவாலா பணம் 30,000 பறிமுதல்
/
செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஹவாலா பணம் 30,000 பறிமுதல்
செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஹவாலா பணம் 30,000 பறிமுதல்
செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஹவாலா பணம் 30,000 பறிமுதல்
ADDED : ஜூன் 29, 2025 02:04 AM
செங்கம்,:செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில், கணக்கில் வராத, 30,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சார்பதிவாளர் சிவசங்கரன். பத்திர பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் கேட்பதாக, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது. அதன்படி, இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை இரவு, 11:00 மணி வரை நடந்தது. அப்போது கணக்கில் வராத, 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், பத்திரப்பதிவு செய்த ஆவணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்காமல் இருந்தது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.