/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மகன் காதல் விவகாரத்தில் தந்தை கொலை இருவருக்கு ஆயுள்
/
மகன் காதல் விவகாரத்தில் தந்தை கொலை இருவருக்கு ஆயுள்
மகன் காதல் விவகாரத்தில் தந்தை கொலை இருவருக்கு ஆயுள்
மகன் காதல் விவகாரத்தில் தந்தை கொலை இருவருக்கு ஆயுள்
ADDED : ஜூன் 27, 2025 03:20 AM
திருச்சி,:திருச்சி அருகே மகன் காதல் விவகாரத்தில், தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பரமசிவபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன், 48. இவரது மகன் ஆகாஷ், அதே பகுதியைச் சேர்ந்த குமார், 52, என்பவரின் மகளை காதலித்துள்ளார். இதுதொடர்பான தகராறில், 2020 செப்., 9ல் கணேசன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குமார், அவரது நண்பர் நாகராஜ், 39, ஆகிய இருவரும் லால்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத், நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், கணேசனை கொலை செய்த குமார், நாகராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா, 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.