/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உறவினர்களிடையே முன்விரோத தகராறு: 5 பேர் மீது வழக்கு
/
உறவினர்களிடையே முன்விரோத தகராறு: 5 பேர் மீது வழக்கு
உறவினர்களிடையே முன்விரோத தகராறு: 5 பேர் மீது வழக்கு
உறவினர்களிடையே முன்விரோத தகராறு: 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 13, 2024 12:07 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உறவினர்களிடையே முன்விரோத தகராறு காரணமாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த டி.மேட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜய குமார் மனைவி ராஜகுமாரி, 36; இவரது பக்கத்து வீட்டு உறவினர் ரவி,45; இவர்களுக்குள் 4 சென்ட் வீட்டு மனை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் ராஜகுமாரி, தனது வீட்டில் கோழிகளை கூண்டு வைத்து வளர்த்து வந்துள்ளார்.
இதில், கடந்த 6ம் தேதி 5 கோழிகளும், 7ம் தேதி 10 கோழிகளும் இறந்துள்ளது.
இதனால், சந்தேகத்துடன் ராஜகுமாரி சென்று, ரவி மனைவி சந்திரலோக, 40; அவரது மகள் ராஜலட்சுமி ஆகியோரிடம் கேட் டுள்ளார். அப்போது, நாங்கள் தான் கோழிக்கு விஷம் வைத்தோம் எனக்கூறி, ராஜகுமாரியை திட்டியுள்ளனர்.
இதனால், ஏற்பட்ட தகராறில், விஜயகுமார், ராஜகுமாரி ஆகியோரும் அவர்களை திட்டியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.