/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி தர்ணா
/
கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி தர்ணா
ADDED : ஜூலை 16, 2024 12:00 AM

விழுப்புரம்: சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தங்களது மகன்களுடன் தம்பதி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி அடுத்த வெள்ளையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; கூலித் தொழிலாளி. இவரது மனைவி கெஜலட்சுமி, 42; இருவரும் நேற்று காலை 10:30 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன், தங்களது மகன்களுடன் கோரிக்கைகள் வலியுறுத்திய பேனரை வைத்து கொண்டு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து, கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.
அதன் பேரில், கலெக்டர் அலுவலகத்தில் வெங்கடேசன் அளித்துள்ளமனு:
எனக்கு, கீர்த்திவாசன்,13; ரித்திக்வாசன், 9; என இரண்டு மகன்கள் உள்ளனர்.
எனது உறவினர் ஒருவர் வீட்டு மனை, நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், அனந்தபுரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜா, எதிர் தரப்பிற்கு ஆதரவாக, எனது மனைவி, பிள்ளைகளை கடந்த மே 12ம் தேதி, நான் வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்கி, கொலை முயற்சி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இது மனித உரிமை மீறிய செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தம்பதி திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.