/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
/
கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
ADDED : ஜூன் 23, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், தந்தை பெரியார் நகரில் கஞ்சா விற்பனை நடப்பதாக தாலுகா போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அங்கு, கஞ்சா விற்ற தந்தை பெரியார் நகர், தாமிரபரணி சதுக்கத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சூர்ய பிரபாகரன், 21; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 0.54 மில்லி கிராம் கொண்ட 20 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.