நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், ; விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி காணாமல் போனார்.
விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தை சேர்ந்தவர் சக்தி மகள் அழகம்மாள், 19; இவர், அரகண்டநல்லூர் தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.