/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2026 தேர்தலில் 234 தொகுதிகளை கைப்பற்றுவோம் அமைச்சர் பொன்முடி ஆருடம்
/
2026 தேர்தலில் 234 தொகுதிகளை கைப்பற்றுவோம் அமைச்சர் பொன்முடி ஆருடம்
2026 தேர்தலில் 234 தொகுதிகளை கைப்பற்றுவோம் அமைச்சர் பொன்முடி ஆருடம்
2026 தேர்தலில் 234 தொகுதிகளை கைப்பற்றுவோம் அமைச்சர் பொன்முடி ஆருடம்
ADDED : ஜூலை 29, 2024 06:23 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், தி.கொசப்பாளையத்தில் நடந்தது.
கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடி, 40 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. இதற்காக உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுதேர்தல் பணிகளை இப்போதே கட்சியினர் துவக்க வேண்டும்.
இதற்காக தேர்தல் பணி பொறுப்பு குழுவை, முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இதில், மாநில இளைஞரணி அமைப்பாளர் அமைச்சர் உதயநிதி இடம்பெற்றுள்ளார். இவர், ஒரே ஒரு செங்கல்லை வைத்து, தமிழக சட்டபை தேர்தல் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்றிக் காட்டியவர்.
தேர்தல் பிரசாரத்தில் திறமை வாய்ந்தவர். மேலும், தொகுதி வாரியாக உதயநிதி வந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, கருத்துகளை கேட்க உள்ளார்.
லோக்சபா தேர்தலில் 40க்கு 40 என வெற்றி பெற்ற தி.மு.க., தலைமையிலான கூட்டணி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான பிரசார பணிகளை, தி.மு.க.,வினர் துவக்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.