/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : மே 26, 2025 12:05 AM

விழுப்புரம் : அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
'வி.ஆர்.எஸ்., லுமினா-30' தலைப்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமநாதன், நிர்வாக உறுப்பினர் கல்பனா முன்னிலை வகித்தனர். முதல்வர் அன்பழகன் வரவேற்றார். நடிகர் பாலா சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி துவங்கி, 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, பேராசிரியர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கினர்.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.