/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஞ்சமி நிலத்தில் பட்டா ரத்து செய்ய கோரிக்கை
/
பஞ்சமி நிலத்தில் பட்டா ரத்து செய்ய கோரிக்கை
ADDED : மே 26, 2025 12:06 AM
விழுப்புரம்,: விழுப்புரம் அருகே பஞ்சமி நிலத்தில், பழங்குடியினருக்கு வழங்கியுள்ள மனைப் பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த அதனுாரைச் சேர்ந்த வீரபாண்டியன் தலைமையில் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1892ல் தரிசு நில சட்டம் கொண்டு வந்ததன்படி, அதனுாரில் பறையர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி தரிசு நிலத்தில், நிலமற்ற ஏழை பறையர் குடும்பத்தினர், நிலத்தை மேம்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த பயிர்களை அழித்துவிட்டு, தற்போது 7 பழங்குடியின மக்களுக்கு, அங்கு வீடு கட்டும் பணி நடந்தது. அதனை நாங்கள் சட்டப்படி தடுத்ததால், கடந்த பிப்ரவரி 24ம் தேதி பணியை நிறுத்தினர்.
ஆனால், மீண்டும் அங்கு நிறுத்தி வைத்திருந்த வீடு கட்டும் பணியை, தற்போது தொடர்கின்றனர். அந்த இடம், பறையர் மக்களுக்கான பஞ்சமி நிலமாகும். உண்மையை மறைத்து பட்டா வழங்கியுள்ளனர்.
அதனை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.,விடம் முறையிட்டுள்ளோம். அதனால், பஞ்சமி நிலத்தில் நடக்கும் வீடு கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.