/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் நாளை பா.ஜ., ஆலோசனை
/
விழுப்புரத்தில் நாளை பா.ஜ., ஆலோசனை
ADDED : ஜூன் 14, 2025 07:01 AM
விழுப்புரம் : மதுரை 'முருக பக்தர்கள் மாநாடு' ஏற்பாடு குறித்த பா.ஜ., ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் நாளை நடக்கிறது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, லோகலட்சுமி திருமண மண்டபத்தில், நாளை 15ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெறும் கூட்டத்திற்கு, பெருங்கோட்ட பொறுப்பாளர் மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநிலத் துணைத் தலைவர் சம்பத், செயலாளர் மீனாட்சி, மாவட்ட தலைவர்கள் தர்மராஜ், விநாயகம், கிருஷ்ணமூர்த்தி, தமிழழகன் மற்றும் விழுப்புரம், கடலுார் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
ஏ.ஜி., பிறந்த நாள்
முன்னதாக, விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு மணி மண்டபத்தில் காலை 10:00 மணிக்கு, அவரது பிறந்த நாள் விழா நடக்கிறது. இங்குள்ள கோவிந்தசாமியின் சிலைக்கு, மாநில தலைவர், முன்னாள் தலைவர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.
முன்னதாக விழுப்புரம் அடுத்த பிடாகத்தில், காலை 9:00 மணிக்கு, மாநில தலைவர், முன்னாள் தலைவர் ஆகியோருக்கு பா.ஜ., மாநில துணைத் தலைவர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.