ADDED : அக் 20, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: தம்பியை காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரசோழபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அறிவழகன், 23; இவர் செஞ்சியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த 13ம் தேதி உடல் நிலை சரியில்லை எனக் கூ றி சம்பளம் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால், நேற்று முன்தினம் வரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவல்லை.
இதுகுறித்து அவரது அண்ணன் அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் , செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

