/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பிரசாரம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பிரசாரம்
ADDED : மே 24, 2025 09:32 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பிரசாரம் நடந்தது.
புதிய பஸ் நிலையத்தில், நடந்த பிரசாரத்தை, தேர்தல் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு சாதனை விளக்க புத்தகங்கள் வழங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு புஷ்பராஜ், தொகுதி பார்வையாளர்கள் துரை சரவணன், கருணாநிதி, ஜெயராஜ், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன்.
நகர செயலாளர்கள் சக்கரை, ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வ சிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், பிரபாகரன், முரளி, ராஜி, கணேசன், மைதிலி ராஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் ஜீவா.
நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம், கவுன்சிலர்கள் மணவாளன், ஜனனி தங்கம், சாந்தராஜ், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.