/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழுதான விற்பனை முனைய இயந்திரத்தால் தலைவலி: ரேஷன் கடை விற்பனையாளர்கள் புலம்பல்
/
பழுதான விற்பனை முனைய இயந்திரத்தால் தலைவலி: ரேஷன் கடை விற்பனையாளர்கள் புலம்பல்
பழுதான விற்பனை முனைய இயந்திரத்தால் தலைவலி: ரேஷன் கடை விற்பனையாளர்கள் புலம்பல்
பழுதான விற்பனை முனைய இயந்திரத்தால் தலைவலி: ரேஷன் கடை விற்பனையாளர்கள் புலம்பல்
ADDED : ஜூலை 16, 2024 12:22 AM

விழுப்புரம் மாவட்டத்தில் 1255 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளின் மூலம் பயனாளிகளுக்கு சலுகை விலையில் பாமாயில், துவரம் பருப்பு, சக்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.
அனைத்து ரேஷன் கடைகளிலும், முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, விற்பனை முனைய இயந்திரம் (பி.ஓ.எஸ்.,) மூலம், ரேஷன் கார்டுதாரர்களின் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்யப்பட்டும், கைரேகை வைத்தும் பொருட்கள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட விற்பனை முனைய இயந்திரத்தின் செயல்பாடுகள் குறைந்து வந்ததால், அரசு மூலம் கடந்த மாதம் 13ம் தேதி, புதிதாக விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் தாலுகாவில் மட்டும் 254 கடைகளுக்கு இயந்திரம் வழங்கப்பட்டது.புதியதாக வழங்கப்பட்டுள்ள விற்பனை முனைய இயந்திரத்திற்கு இரண்டு சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக வழங்கப்பட்ட இயந்திரம் செயல்படுவதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக, ரேஷன் கடை விற்பனையாளர்கள் தரப்பில்புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக புதிய இயந்திரம் மூலம் ஸ்மார்ட் கார்டு சரியாக ஸ்கேன் ஆகாமல் இருப்பது, இயந்திரத்தை நீண்ட நேரம் சார்ஜ் போட்டும், குறித்த நேரத்தில் சார்ஜ் ஏறாமல் இருப்பது, நெட் வொர்க் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளால், விற்பனையாளர்கள் பொது மக்களுக்கு குறித்த நேரத்தில் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
புதிய இயந்திரத்தில் '2ஜி'க்கு பதில், '4ஜி' சிம் வழங்கப்பட்டும் பல கிராமங்களில் நெட் வொர்க் குறைபாடு காரணமாக விற்பனை முனைய இயந்திரம் செயல்படவில்லை.
குறைபாடுகள் குறித்து, சம்மந்தப்பட்ட விற்பனை முனைய இயந்திரத்தின் சார்பில் தொழில்நுட்ப பிரிவினர் நேரில் வந்து, பார்வையிட்டும் குறைபாடுகள் தொடர்கிறது என விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பல ரேஷன் கடைகளில் விற்பனை முனைய இயந்திரம் அடிக்கடி மக்கார் பண்ணுவதால், ரேஷன் கடை விற்பனைாளருக்கும், பொது மக்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது.
இந்த பிரச்னை தொடர்பாக எதிர்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர், சரியாக இயங்காத விற்பனை முனைய இயந்திரத்தை, வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிரச்னையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ரேஷன் கடைகளில் புதிதாக வழங்கப்பட்டுள்ள விற்பனை முனைய இயந்திரத்தின் குறைபாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.