/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொளசூர் மகா பெரியவா நகரில் மகா குருபெயர்ச்சி ஹோமம்
/
மொளசூர் மகா பெரியவா நகரில் மகா குருபெயர்ச்சி ஹோமம்
மொளசூர் மகா பெரியவா நகரில் மகா குருபெயர்ச்சி ஹோமம்
மொளசூர் மகா பெரியவா நகரில் மகா குருபெயர்ச்சி ஹோமம்
ADDED : மே 25, 2025 04:37 AM

திண்டிவனம்,: மொளசூரில் அமைந்துள்ள மகா பெரியவா நகரில், அக்ரஹாரம் தெய்வீக ஸ்தாபனம் மற்றும் லலித்தாம்பாள் வேத சிவகாம டிரஸ்ட் சார்பில் நேற்று மகா குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது.
இந்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, கடந்த மே 14ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த இடப்பெயர்ச்சி, 12 ஆண்டிற்கு ஒரு முறை நிகழ கூடியது. பல்வேறு பலன்களை தரக்கூடிய குருபெயர்ச்சியொட்டி, புதுச்சேரி - திண்டிவனம் சாலை மொளசூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகா பெரியவா நகரில், நேற்று அக்ரஹாரம் தெய்வீக ஸ்தாபனம் மற்றும் லலித்தாம்பாள் வேத சிவகாம டிரஸ்ட் சார்பில் மகா குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது.
காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை, சிதம்பரம் கீதாராம சாஸ்திரிகள் தலைமையில் ஹோமம் நடந்தது. அனைத்து ராசிகளுக்கும் விரிவான சங்கல்பம், தனிப்பட்ட குரு தோஷ நிவாரண ஹோமங்கள் நடத்தப்பட்டன.
சிறப்பு ஹோம பரிகாரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்ரஹாரம் குரூப்ஸ் சேர்மன் கீர்த்திவாசன் செய்திருந்தார்.