/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டும், குழியுமான சாலை: விழுப்புரத்தில் வாகன ஓட்டிகள் அவதி
/
குண்டும், குழியுமான சாலை: விழுப்புரத்தில் வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான சாலை: விழுப்புரத்தில் வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமான சாலை: விழுப்புரத்தில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 20, 2025 09:30 PM

விழுப்புரம்: குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழு ப்புரத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகள், சீரமைக்காமல் உள்ளதால், மழைநீர் குளம் போல் தேங்கி, மேலும் சேதமடைந்து, பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
விழுப்புரம் திருச்சி சாலையிலிருந்து நகர பகுதிக்கு செல்லும் கலைஞர் நகரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சாலை முழுவதும் போடாமல் பாதியில் நிறுத்தப்பட்டது.
சீனுவாசா நகர் பகுதியிலிருந்து கே.கே.ரோடு வரை, இந்த சாலை 1 கி.மீ., தொலைவிற்கு கிடப்பில் விட்டதால், ஜல்லிகள் பெயர்ந்து சாலை இருக்கும் இடம் தெரியாமல் குண்டும், குழியுமாக தொடர்கிறது.
நகரில் பிரதான சாலையான இந்த தார்ச்சாலையில், தொடர் மழையால் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் சேறு, சகதியில் விழும் நிலை உள்ளது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

