/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழங்குடியின மக்கள் விழிப்புணர்வு கூட்டம்
/
பழங்குடியின மக்கள் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : அக் 20, 2025 09:30 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பழங்குடியினர் செயற்பாட்டாளர் அகத்தியன் தலைமை தாங்கி, பழங்குடியின மக்களுக்கான கல்வியின் முக்கியத்துவம், பொருளாதாரம் உயரும் நிலை, சமத்துவம், தொழிற்வளர்ச்சி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் சிறப்புகள் பற்றி கூறினார். தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகை, இனிப்பு வழங்கப்பட்டது.
ராணுவ வீரர் ரட்சகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு மாநில துணை தலைவர் பழனி, தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங் கதலைவர் ஸ்ரீபன்ராஜ், முற்போக்கு மாணவர் கழக துணை அமைப்பாளர் விஜயலட்சுமி ரமேஷ், வி.சி., பழங்குடியினர் விடுதலை இயக்கம் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.

