/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி சட்டக்கல்லுாரியில் மாநில அளவிலான போட்டி
/
சரஸ்வதி சட்டக்கல்லுாரியில் மாநில அளவிலான போட்டி
ADDED : அக் 20, 2025 09:29 PM

திண்டிவனம்: திண்டிவனம் சரஸ்வதி சட்டக்கல்லுாரி வளாகத்தில், மாநில அளவிலான சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கான கைப்பந்து மற்றும் எறிபந்து போட்டிகள் நடந்தது.
துவக்க விழாவில், ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழுத்தலைவர் மணி போட்டிகளை துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு சட்டக்கல்லுாரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். கைப்பந்து ஆண்கள் பிரிவில் சேலம் அரசு சட்டக்கல்லுாரி முதல் பரிசையும், சென்னை சீர்மிகு சட்டப்பள்ளி இரண்டாம் பரிசையும் வென்றனர்.
கைப்பந்து பெண்கள் பிரிவில் சென்னை சீர்மிகு சட்டப்பள்ளி முதல் பரிசையும், திருச்சி அரசு சட்டக்கல்லுாரி இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
எறிபந்து பெண்கள் பிரிவில் சென்னை சீர்மிகு சட்டப்பள்ளி முதல் இடத்தையும், கோவை அரசு சட்டக்கல்லுாரி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
நிறைவு விழாவிற்கு கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர் பரசுராமன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை உதவி இயக்குனர் பரமசிவம், முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
சட்டக்கல்லுாரி நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

