/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
16 வயது சிறுமிக்கு குழந்தை வாலிபர் மீது போக்சோ
/
16 வயது சிறுமிக்கு குழந்தை வாலிபர் மீது போக்சோ
ADDED : ஜூலை 11, 2024 04:41 AM
விருதுநகர்: விருதுநகரின் ஆமத்துார் அருகே அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், உறவினர் சீனிவாசன் 22.மீது விருதுநகர் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
ஆமத்துார் அருகே அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும் உறவினர் சீனிவாசன் 22, காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்ததால் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானார்.
காதலர்கள் பெற்றோருக்கு தெரியாமல் 2024 ஜன. 29ல் ஆனைக்குட்டம் பிள்ளையார் கோயிலில் திருமண செய்து அதே பகுதியில் வீடு எடுத்து வசித்தனர். ஜூன் 28ல் ஆமத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அழாததால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்து குழந்தை பிறந்திருப்பதை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாப்பா 57, கண்டறிந்தார். விருதுநகர் மகளிர் போலீசார் சீனிவாசன் மீது போக்சோ வழக்கு பதிந்தனர்.