/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆடிப்பூரத் திருவிழா நாளை கொடியேற்றம்
/
ஆடிப்பூரத் திருவிழா நாளை கொடியேற்றம்
ADDED : ஜூலை 29, 2024 12:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா நாளை(ஜூலை 30) கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.
இக்கோயிலில் நாளை (ஜூலை 30) முதல் ஆக. 10 வரை ஆண்டாள் திரு ஆடிப்பூரத் திருவிழா நடக்க உள்ளது. இதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேர் அழகுப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதிய வடங்கள் பொருத்தப்பட உள்ளது. கோயில் முன்பகுதி ஆடிப்பூர பந்தல் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் தேர் சக்கரம் செல்ல வேண்டிய பாதையை அடையாளம் காண்பிக்கும் வகையில் வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூலை 30) காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வாகன புறப்பாடும் நடக்கிறது.
தினமும் காலை 11:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஆடிப்பூர பந்தலில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செய்துள்ளனர்.