ADDED : ஜூலை 29, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலச் சங்க 62வது சங்க மகாசபை கூட்டம் நடந்தது. கர்னல் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
சங்க தலைவர் பாண்டியன் வரவேற்றார். காலமான சங்க உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்ட நடவடிக்கை குறித்து சங்க பொதுச் செயலாளர் ஜெயராஜ் பேசினார். பொருளாளர் சபரிராஜன் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். ஒருங்கிணைப்பாளர் சுபேதார் சண்முகம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். சுபேதார் சண்முகம் நன்றி கூறினார்.