/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியில் டிரான்ஸ்பார்மர் அருகே தீ வைப்பு
/
சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியில் டிரான்ஸ்பார்மர் அருகே தீ வைப்பு
சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியில் டிரான்ஸ்பார்மர் அருகே தீ வைப்பு
சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியில் டிரான்ஸ்பார்மர் அருகே தீ வைப்பு
ADDED : ஜூலை 12, 2024 03:50 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் டிரான்ஸ்பார்மரின் கீழே குப்பைக்கு தீ வைக்கும் சம்பவம் தொடர்வதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி மாநகராட்சி 45 வது வார்டு சுப்பிரமணியபுரம் காலனி செல்லும் வழியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து அப்பகுதியினருக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடம் அருகில் பட்டாசு கடைகள், அச்சகங்கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதி குப்பை அனைத்தும் டிரான்ஸ்பார்மர் அருகிலேயே கொட்டப்படுகின்றது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மரின் கீழே கொட்டப்பட்ட குப்பையில் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் தீ டிரான்ஸ்பார்மரில் உள்ள வயரிலும் பிடித்ததால் வயர் அறுந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த மின் துறையினர் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது.
தொடரும் சம்பவம்
ஒரு வாரத்திற்கு முன்பு பன்னீர் தெப்பம் அருகே இதே போல் டிரான்ஸ்பார்மர் அருகே கொட்டப்பட்ட குப்பையில் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்து தீயை அணைத்தனர். எனவே சிவகாசி பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.