ADDED : ஜூலை 12, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது.
ஒன்றியக்குழு தலைவர் சுமதி தலைமை வகித்தார். 9வது வார்டு கவுன்சிலர் சரோஜா யானைக்குழாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஒன்றிய நிர்வாகம் தரப்பில் 2 கவுன்சிலர்களுக்கு ஏன் முன்பே தீர்மான நகலை அனுப்பவில்லை என சில கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து மன்றப்பொருளாக 65 தீர்மானங்கள் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பேவர் பிளாக், சிமென்ட் ரோடு, வாறுகால் அமைத்தல் என 23 பணிகளும், 10 மாற்று பணிகளுக்கும் நிதி ஒதுக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.