/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் ரத்த ஆல்கஹால் பரிசோதனை
/
அரசு மருத்துவமனையில் ரத்த ஆல்கஹால் பரிசோதனை
ADDED : ஜூலை 29, 2024 12:14 AM
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியுள்ளனரா என பரிசோதிக்க ரத்த ஆல்கஹால் பரிசோதனை செய்யப்படுகிறது.
விருதுநகர் மதுரை ரோடு, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ராமமூர்த்தி ரோட்டில் அருகே குடியிருப்பு பகுதி, ராமமூர்த்தி மேம்பாலத்தின் அடிப்பகுதி என நகரின் முக்கியப்பகுதிகளின் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது.
இங்கு மது குடித்து விட்டு வாகனத்தில் சென்று விபத்து ஏற்படுத்தியவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வந்து போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
இதில் மது குடித்தவர்களின் ரத்தத்தில் உள்ள சரியான ஆல்கஹால் அளவு பதிவிட முடியாத நிலை இருந்தது.
ஆனால் தற்போது மருத்துவமனையில் ரத்த ஆல்கஹால் பரிசோதனை கருவி செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் ரத்தத்தை எடுத்து அதில் உள்ள சரியான ஆல்கஹாலின் அளவை தெரிந்து சான்றிதழில் பதிவு செய்து போலீசாருக்கு வழங்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையால் முடிவு தெரிவதற்கு ஒரு நபருக்கு முக்கால் மணி நேரம் ஆவதால் போலீசார் நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.