/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுக்கு பஸ் வசதி வேண்டும்; பெற்றோர் வலியுறுத்தல்
/
மாணவர்களுக்கு பஸ் வசதி வேண்டும்; பெற்றோர் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு பஸ் வசதி வேண்டும்; பெற்றோர் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு பஸ் வசதி வேண்டும்; பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 12:13 AM
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே ராஜபாளையம் வலையபட்டி புதிய வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர் சங்கத்தினர், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 280க்கும் அதிகமான மாணவர்கள் சுற்றுபகுதி கிராமங்களான பெத்தலேகம், கோவிலுார், அருணாச்சலபுரம், நரிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பயின்று வருகின்றனர்.
காலை, மாலை வந்து செல்ல பள்ளி நேரத்திற்கு பஸ் வசதி இல்லை. வேறு வழியின்றி மாணவர்கள் குழுவாக ஆட்டோ, குடும்ப உறுப்பினர்களின் டூவீலர்கள், சைக்கிள், கால்நடையாக, லிப்ட் கேட்டு பயணித்து வந்து செல்ல வேண்டி உள்ளது. பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் மாரிமுத்து: மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி நேரத்தில் ராஜபாளையத்தில் இருந்தும், வளையப்பட்டியில் இருந்தும் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கினால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் பயன்பெறுவர். இந்த வழிதடத்தில் பஸ்கள் இயக்காததால் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து வருகிறது.