ADDED : ஜூன் 30, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் புல்லக்கோட்டையில் அட்மா திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக்குழுவுக்கு காரீப் பருவக் கால பயிற்சி நடந்தது.
புல்லலக்கோட்டை வேளாண் முன்னேற்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி தலைவர் மங்களேஸ்வரி பங்கேற்றார். தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.
உதவி வேளாண் அலுவலர் பொன்முடி, மீன் வளத்துறையினர் பேசினர்.
தோட்டக்கலை உதவி அலுவலர் பரமசிவம் நன்றிக் கூறினார்.