/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீ வைப்பது அதிகரிப்பதால் காற்று மாசும் வேகமெடுக்குது
/
தீ வைப்பது அதிகரிப்பதால் காற்று மாசும் வேகமெடுக்குது
தீ வைப்பது அதிகரிப்பதால் காற்று மாசும் வேகமெடுக்குது
தீ வைப்பது அதிகரிப்பதால் காற்று மாசும் வேகமெடுக்குது
ADDED : ஜூன் 30, 2024 06:05 AM

விருதுநகர், : விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் காய்ந்த சருகுகள், கருவேல மரங்களில் தீ வைப்பது அதிகரிப்பதால் காற்று மாசும், கார்பனின் அளவு அதிகரிப்பதும் வேகமெடுக்கிறது.
மாவட்டத்தில் ராஜபாளையம் கார்பன் சமநிலை பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மில்கள், வாகன போக்குவரத்தால் ஏற்படும் புகையை கட்டுப்படுத்தி ஜீரோ கார்பன் நிலைக்கு கொண்டு வர இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அருகே மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் வனமும் காக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த முன்னெடுப்பு ஒரு பக்கம் இருக்க, மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருவது போல் ஆங்காங்கே காலி நிலங்களில் காய்ந்த சருகுகள், கருவேல மரங்களுக்கு தீ வைப்பது அதிகரித்து வருகிறது. இதனால் காற்றில் கார்பன் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. காற்று மாசும் வேகமாகி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தீ விபத்துக்கும் வாய்ப்பாகிறது.
குறிப்பாக குப்பைக்கு தீ வைப்பது இன்றளவும் உள்ளாட்சி அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் உள்ளன. இதனால் காற்றில் பாலிதீன் கலந்த கார்பனின் குறியீடு அதிகரிக்கும் பட்சத்தில் அது சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மாவட்டத்தின் பிற பகுதிகளில் செய்யும் செயல்பாடுகளால் ராஜபாளையத்திலும் கார்பன் சமநிலை பின்பற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
ஏற்கனவே அவ்வூர் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதிலேயே அதிகப்படியான புகை வெளியேறி வருகிறது.
தமிழக அளவில் மிகப்பெரிய பிரச்னையாக காற்று மாசு உள்ளது. பருவநிலை மாற்றத்திற்கும் இது முக்கிய காரணமாகிறது. எனவே காற்று மாசை குறைக்க தேவையற்ற தீ வைப்புகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.