/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விலை வீழ்ச்சி, நோய் தாக்குதலால் தவிக்கும் தென்னை விவசாயிகள்
/
விலை வீழ்ச்சி, நோய் தாக்குதலால் தவிக்கும் தென்னை விவசாயிகள்
விலை வீழ்ச்சி, நோய் தாக்குதலால் தவிக்கும் தென்னை விவசாயிகள்
விலை வீழ்ச்சி, நோய் தாக்குதலால் தவிக்கும் தென்னை விவசாயிகள்
ADDED : ஜூன் 30, 2024 05:24 AM
ராஜபாளையம், : தென்னை விவசாயிகள் நோய் தாக்குதலுக்கு தீர்வு காண முடியாமலும், சாகுபடி செலவுக்கு தகுந்த விலை இல்லா சூழலில் தொடர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியான ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய விலை பொருட்களில் தென்னை பிரதானமாக இருந்து வருகிறது.
நீண்ட கால பலன், பராமரிப்பு செலவு குறைவு, ஆண்டு முழுவதும் சாகுபடி போன்ற வசதிகளை கருதி ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம், பல்வேறு நோய் தாக்குதலால் காய்களின் தரம் பாதித்து மரங்களின் உற்பத்தியை வீதம் குறைந்துவிட்டது. இவற்றுடன் விலையின்மை காரணமாக குத்தகை எடுத்த விவசாயிகளும் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக வெள்ளை ஈக்களின் தாக்குதலால் இலைகளின் பச்சையம் சாறு உறிஞ்சப்பட்டு பூக்கள் பிடிப்பதில் இருந்து மரங்களின் தரம் பாதிப்படைந்து வருகிறது.
விவசாயிகளும் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டாலும் காற்றின் மூலம் பரவி வரும் இவற்றின் பாதிப்பு குறைவதாக இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 15 முதல் 20 வரை சென்ற தேங்காயின் விலை தற்போது ரூ.7 என்ற அளவிலேயே உள்ளது.
இதன் மூலம் இத்தொழில் ஈடுபட்ட குத்தகைதாரர்களும் செய்த முதலீட்டை கூட திருப்பி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு மீண்டும் இப்பணிகளில் ஈடுபட தயக்கம் காட்டி வருகின்றனர்.
பத்தாயிரம் ஹெக்டர் அளவிற்கு விவசாயம் நடை பெற்று வரும் இப்பிரதான தென்னை சார்ந்த தொழிலுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக விவசாயத் துறை சார்பில் நோய் தடுப்பு மருந்துகளை வழங்கியும், ஒருங்கிணைந்த பராமரிப்பு மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் விரும்புகின்றனர்.