/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி கூட்டத்தில் பொறியாளர் வெளியேறியதை கண்டித்து கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
/
நகராட்சி கூட்டத்தில் பொறியாளர் வெளியேறியதை கண்டித்து கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகராட்சி கூட்டத்தில் பொறியாளர் வெளியேறியதை கண்டித்து கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகராட்சி கூட்டத்தில் பொறியாளர் வெளியேறியதை கண்டித்து கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
ADDED : ஜூன் 29, 2024 06:06 AM
விருதுநகர் : விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் இருந்து பொறியாளர் வெளியேறியதை கண்டித்து கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானங்களை நிறைவேற்றாமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.
விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன்தலைமையில் நடந்தது. கமிஷனர் விடுப்பில் சென்றதால், பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டம் துவங்கியதும் 15 நாட்களாகியும் குடிநீர் வரவில்லை என கவுன்சிலர்கள் முத்துராமன், ஜெயக்குமார், மதியழகன் புகார் தெரிவித்தனர். ஆனைக்குட்டம் பிரதான குடிநீர் குழாயில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு வருவதால் குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது, ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து காங். கவுன்சிலர் ராஜ்குமார் 'மிகவும்மோசமாக வேலை செய்து மக்களை அவதிக்கு உள்ளாக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது நடவடிக்கை எடு' என்ற பதாகையுடன் தலைவர் முன் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக காங். உறுப்பினர்கள் அனைவரும் அங்கு சென்றனர்.
குடிநீர் பணிக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுப்போம் இல்லையெனில் டென்டரை ரத்து செய்ய எழுதி அனுப்புவோம் என நகராட்சி தலைவர் கூற, அப்போது பொறியாளர் ஏற்கனவே உள்ள ஒப்பந்ததை ரத்து செய்து விட்டு மீண்டும் டெண்டர் விட 3 ஆண்டுகள் ஆகி விடும் என தெரிவித்தார்.
அப்போது கவுன்சிலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் பொறியாளர் கூட்டத்தை விட்டு வெளியேறினார். தொடர்ந்து கவுன்சிலர்களும் புறக்கணிக்க எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.