/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தார்ப்பாய் போடாமல் கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள்
/
தார்ப்பாய் போடாமல் கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள்
தார்ப்பாய் போடாமல் கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள்
தார்ப்பாய் போடாமல் கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள்
ADDED : ஜூன் 29, 2024 06:13 AM

காரியாபட்டி, : கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் தார்ப்பாய் போட்டு மூடாததால், சிதறும் கனிமங்களால் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
காரியாபட்டி பகுதியில் ஏராளமான கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. ரோடு பணிகள், கட்டடங்கள் கட்ட கிராவல், செம்மண், முண்டு கற்கள், கிரஷர் தூசி, ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது தார்ப்பாய் கொண்டு மூட வேண்டும் என்பது விதி. எந்த ஒரு வாகனத்திலும் கனிமங்கள் ஏற்றி செல்லும் போது மூடி செல்வது கிடையாது. வேகமாக செல்லும்போது ரோட்டில் ஜல்லிக்கற்கள் சிதறி விழுகின்றன.
மற்ற வாகனங்கள் அதிவேகமாக வரும் போது ஜல்லிக் கற்கள், முண்டு கற்கள் உள்ளிட்டவைகள் மீது ஏறிச்செல்ல நேரிடும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கிரஷர் தூசி, கிராவல்மண் எடுத்துச் செல்லும் போது காற்றில் தூசி பறந்து ரோட்டில் நடமாடுபவர்கள் மீதும், பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் கண்ணில் பட்டு ஆபத்தை ஏற்படுத்துகிறது. வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் தார் பாய் கொண்டு மூட வேண்டும் என அனுமதி சீட்டு வாங்க வரும் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மூடாத வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.