/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவுரவ பேராசிரியர்் ஆர்ப்பாட்டம்
/
கவுரவ பேராசிரியர்் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்குதல், அரசாணை 56ஐ நடைமுறைப்படுத்துதல், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ரூ. 50 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்குதல், எழுத்து தேர்வை ரத்து செய்து பழைய முறையை கொண்டு வருதல், பணி நிரந்தரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க பேராசிரியர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேராசிரியர்கள் கணேஷ்வரி, சவுந்தரபாண்டி பேசினர்.