/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்நடை ஆம்புலன்ஸ்க்கு ஊழியர்கள் தேவை
/
கால்நடை ஆம்புலன்ஸ்க்கு ஊழியர்கள் தேவை
ADDED : ஜூலை 11, 2024 04:36 AM
விருதுநகர்: 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி செய்திக்குறிப்பு: நோய்வாய் பட்ட விலங்குகளுக்கான மருத்துவ சேவையை அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று வழங்கும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை 1962 என்ற எண்ணில் செயல்படுகிறது. இதில் பணிபுரிய விருப்பமுள்ள டிரைவர்கள், ஆம்புலன்ஸ் உதவியாளர் விண்ணப்பிக்கலாம். டிரைவர் தேர்விற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு செய்து பேட்ச் எடுத்துஓராண்டு முடிந்திருக்கவேண்டும்.
ஆம்புலன்ஸ் உதவியாளர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி உள்ளோர்ஜூலை 13ல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்திற்கு காலை 9:00 மணிக்கு வர வேண்டும். அசல் கல்வி சான்று, உரிமம் வைத்திருப்பது அவசியம். விவரங்களுக்கு 91542 51501 என்ற எண்ணில் அணுகலாம், என்றார்.