/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 29, 2024 12:16 AM

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தென் தமிழகத்தில் இருந்து கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பலர் கரும்புத் தொட்டில் கட்டியும், பொங்கலிட்டும், அக்னி சட்டி ஆயிரம் கண் பானை ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சாத்துாரில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத பக்தர்கள் கோயில் முன்பு நின்று சூடம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர்.