ADDED : ஜூலை 11, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு வெம்பக்கோட்டை ரோடு பன்னீர் தெப்பம் அருகே ஸ்டேஷனரி பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு அதிகாலை 2:30 மணி அளவில் தீ பிடித்தது.
இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த நோட்டு புத்தகம், பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் எரிந்து சேதமானது.
சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.