ADDED : ஜூலை 12, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மை பூங்காவை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார்.
இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும், மகப்பேறு அடையும் தாய்கள், குழந்தைகளுக்கு இந்த தாய்மை பூங்கா மன அமைதியை ஏற்படுத்தும் என டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கன்னிச்சேரிபுதுார் சுகாதார நிலையத்தில் உள்ள மகப்பேறு பிரிவில் தாய்மார்கள் குழந்தை பெற்றதும் தனது குழந்தையுடன் இருக்கும் முதல் புகைப்படத்தை கலெக்டர் வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.