/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் கேரளா பர்னிச்சர் கண்காட்சி
/
விருதுநகரில் கேரளா பர்னிச்சர் கண்காட்சி
ADDED : ஜூலை 12, 2024 04:00 AM

விருதுநகர்: விருதுநகர் - அருப்புக்கோட்டை ரோட்டில் வாடியான் மாதா கோவில் மண்டபத்தில் கேரளா பர்னிச்சர் கண்காட்சியை எம்.எல்.ஏ., சீனிவாசன் துவக்கி வைத்தார். இதில் நகராட்சித் தலைவர் மாதவன், தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர். நிறுவன மேலாளர் பினிஷ் நன்றி கூறினார்.
நிறுவனர் ஆர்.எம்., நவ்ஷாத் கூறியதாவது:
கண்காட்சியில் ஏராளமான பர்னிச்சர்கள் குறைந்த விலை, நிறைந்த தரத்துடன் உற்பத்தி விலையில் கிடைக்கிறது. மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைபாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள், டில்லி ஆன்டிக் டிசைனர் சோபாக்கள், நீரலாம்பூர் டீக்வுட் பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவித தள்ளுபடியில் கிடைக்கும்.
மேலும் தேக்கு மர சோபா, கட்டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா, மெத்தை, டீப்பாய்கள், திவான் செட் ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று துவங்கிய கண்காட்சி ஜூலை 18 வரை நடக்கிறது, என்றார்.