ADDED : ஜூன் 27, 2024 11:50 PM

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே பயணிகள் அதிகம் புழங்கும் பஸ் ஸ்டாப்பில் இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் இருப்பது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை பி.எஸ்.கே பார்க் முன் 3 வருடங்களாக பயணிகளுக்கு பாதுகாப்பற்ற வகையில் பஸ் ஸ்டாப் இருந்து வந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து கடந்த மாதத்தில் இதற்கான பணி தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் பணிகள் முடிவு பெறாமல் கடந்த ஒரு மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதால் இதை பயன்படுத்தும் பெண்கள்முதியோர் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கணேசன்கூறுகையில், நகரின் நடுவே பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு முக்கியமாக உள்ள பஸ் ஸ்டாப் பயணிகள் இருக்கை, மழை வெயிலிலிருந்து பாதுகாப்பு தாழ்வாரம் என எந்தவித பணிகளையும் முடிவு பெறாமல் வைத்துள்ளனர். இதனால் உபயோகிப்பாளர்கள் தகுந்த பாதுகாப்பின்றி பயன்படுத்தி வரும் சூழல் இருந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.