ADDED : ஜூலை 05, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை செவல்பட்டி ஸ்ரீ மகேஸ்வரன் பட்டாசு ஆலையில் வி. ஏ.ஓ. சீனிராஜ் தலைமை வருவாய்த் துறையினரும் போலீசாரும் பட்டாசு ஆலைக்கு சென்று ஆய்வு செய்தபோது பேன்சி ரக பட்டாசுகள் மரத்திற்கு அடியில் வைத்து தயாரித்த சிவகாசி சேர்ம சங்கரை 37 , போலீசார் கைது செய்தனர்.
போலீசார் 55 பேன்சி ரக பட்டாசுகளையும் மிஷின் திரி மரப்பலகை குத்துாசி திரிஅறுக்கும் கத்தி, மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும் ஆலை உரிமையாளர் சிவகாசி ராமகிருஷ்ணன், சித்துராஜபுரம் மேனேஜர் சுடலை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.