/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் நினைவு ஜோதி ஓட்டம்
/
பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் நினைவு ஜோதி ஓட்டம்
பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் நினைவு ஜோதி ஓட்டம்
பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் நினைவு ஜோதி ஓட்டம்
ADDED : ஜூலை 05, 2025 03:00 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மறைந்த ராம்கோ முன்னாள் சேர்மன் பி ஆர் ராமசுப்பிரமணிய ராஜா 90 வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு ஜோதி ஓட்டம் நடந்தது.
முன்னதாக அவரது நினைவிடத்தில் நடந்த கீர்த்தனாஞ்சலி, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ராம்கோ சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா, அவரது மகன் அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, மனைவி நிர்மலா ராஜூ, ராம்கோ தொழில் நிறுவன அலுவலர்கள், தொழிலாளர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
வேத பாடசாலையில் பி.ஆர்.ஆர் உருவ சிலைக்கு பூஜை நடத்தப்பட்டு நினைவு ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சாரதாம்பாள் கோயில், ராம மந்திரம், பழைய பாளையம் பெரிய சாவடி என நகரின் முக்கிய பகுதிகளுக்கு சுற்றி வந்து ராஜபாளையம் மில்ஸ் வளாகத்தில் நிறைவு அடைந்தது. மாலை 6:30 மணிக்கு திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.