/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சருகில் தீ வைப்பதால் பாதிப்பு காற்றடிப்பதால் விபத்து வாய்ப்பு
/
சருகில் தீ வைப்பதால் பாதிப்பு காற்றடிப்பதால் விபத்து வாய்ப்பு
சருகில் தீ வைப்பதால் பாதிப்பு காற்றடிப்பதால் விபத்து வாய்ப்பு
சருகில் தீ வைப்பதால் பாதிப்பு காற்றடிப்பதால் விபத்து வாய்ப்பு
ADDED : ஜூலை 05, 2025 03:00 AM

விருதுநகர்: விருதுநகர் பகுதிகளில் சருகில் தீ வைப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீ பரவி பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. எனவே இதை தடுக்க வேண்டும்.
பிப்ரவரி மாதங்களில் இலையுதிர்வதை போன்று, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் இலையுதிர்தல் இருக்கும். இந்நேரங்களில் சருகில் தீ வைத்து எரிக்க பலர் முயற்சிக்கின்றனர். இது அசம்பாவிதமாக மாறி பெரிய அளவில் தீ பரவி விபத்தை ஏற்படுத்துகிறது.
நேற்று முன்தினம் கலெக்டர் அலவலக வளாகத்தில் கருப்பசாமி கோயில் பக்கவாட்டில் சிலர் தீ எரித்தனர். இது சருகில் பரவி காற்று வேகத்தால் அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் தீ பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அருகே தீயணைப்புத்துறை அலுவலகம் இருந்ததால் வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் பரவாமல் தடுத்தனர்.
இதே நிலை தான் மற்ற பகுதிகளிலும் உள்ளது. மக்கள் கவனிக்காத நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில், டிரான்ஸ்பார்மர் உள்ள பகுதிகளில் அடிப்புறங்களில் உள்ள சருகுகளை சிலர் தீ வைத்து அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கின்றனர். மேலும் தற்போது காற்று காலம் வேறு என்பதால் அபாயம் உள்ளது. எனவே குப்பை, சருகுகளை எரிப்பதை பொதுமக்களே தாங்களாகவே நிறுத்தி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.