/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காத்திருப்பு : உத்தரவு வழங்கியும் பணம் கிடைக்கலை: பல மாதமாக ஏக்கத்துடன் முதியோர்
/
காத்திருப்பு : உத்தரவு வழங்கியும் பணம் கிடைக்கலை: பல மாதமாக ஏக்கத்துடன் முதியோர்
காத்திருப்பு : உத்தரவு வழங்கியும் பணம் கிடைக்கலை: பல மாதமாக ஏக்கத்துடன் முதியோர்
காத்திருப்பு : உத்தரவு வழங்கியும் பணம் கிடைக்கலை: பல மாதமாக ஏக்கத்துடன் முதியோர்
ADDED : ஜன 26, 2024 04:52 AM
வத்திராயிருப்பு: உதவி தொகை பெற தேர்வு செய்யப்பட்டு அனுமதி கடிதம் கிடைத்து பல மாதமாகியும் இன்னும் பணம் கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். .
தமிழக அரசின் சமூக நலத்துறை , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் முதல் ரூ.1500 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா தோறும் ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரணைக்கு பிறகு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியுதவி, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
2023ல் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், விதவைகளுக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வாறு தேர்வானவர்களுக்கு 2023 ஜூலை மாதம் முதல் அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், பயனாளிகள் பல மாதங்களாக பணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு எப்போது பணம் கிடைக்கும் என்று வருவாய்த்துறை அலுவலகம் சென்று விசாரித்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உத்தரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் 2023 ஜூலை மாதம் முதல் அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், 3 ஆயிரம் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. ஒருமுறை பணம் வழங்கப்பட்டு விட்டால், அதன்பின் ரெகுலராக அவர்களுக்கு உதவித்தொகை கிடைத்து விடும், என்றனர்.
இப்பிரச்சினையில் கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி, அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று பல மாதங்களாக காத்திருக்கும் பயனாளிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

